நவீன தமிழகத்தை வடிவமைப்பதில் கலைஞர் மு. கருணாநிதி மகத்தான பங்களிப்பு கொண்டிருந்தார் – ராகுல் காந்தி!
நவீன தமிழகத்தை வடிவமைப்பதில் கலைஞர் மு. கருணாநிதி மகத்தான பங்களிப்பு கொண்டிருந்தார் என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஐந்து முறை முதல்வராக பதவி வகித்து மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் மூன்றாவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் மறைந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்களும் இது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் உங்கள் தந்தை தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நினைவு நாளில், நவீனத்துவத்தை வடிவமைத்தில் அவரது மகத்தான பங்களிப்பை நான் கௌரவிக்க விரும்புகின்றேன் எனவும், கலைஞர் கருணாநிதி அவர்கள் சமூக புரட்சியின் முக்கிய கலைஞர்களில் ஒருவர் மட்டுமல்லாமல், மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைத்தவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நமது கூட்டாட்சி அரசியல் பல்வேறு இடங்களில் அங்கீகாரம் பெறுவதற்கு போராடியவர். இவர் அமைத்த அடித்தளம் தான் மக்கள் தங்கள் துணை கலாச்சாரம் மற்றும் அடையாளங்களை பாதுகாப்பதற்கு தொடர்ந்து ஊக்குவிக்கிறது. மேலும் உங்கள் தந்தையின் வீரமிக்க வாழ்க்கை போராட்டம் ஒரு வலிமையைக் கொடுக்கிறது எனவும், அவர் நமக்கு வழிகாட்டியாக இருப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.