இன்று கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு.!
கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி சென்னை, கிண்டியில் அமைந்துள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும் என்று ஏற்கனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி சென்னை, கிண்டி. கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
இந்த மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திறந்து வைப்பதாக இருந்தது. அதற்காக, செல்லி சென்று திரௌபதி முர்மு அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், அவரது தேதி உறுதி செய்யப்படாத நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.