கலைஞர் தமிழக அரசியலில் ஒரு விடிவெள்ளி – கே.எஸ்.அழகிரி
கலைஞர் தமிழக அரசியலில் ஒரு விடிவெள்ளி. மாபெரும் சமூக நீதியாளர் என கே.எஸ்.அழகிரி ட்வீட்.
முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாப்களின் அவர்கள் கோபாலபுர இல்லத்தில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில், கலைஞரின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தினார். கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் கலைஞரை புகழ்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கலைஞர் தமிழக அரசியலில் ஒரு விடிவெள்ளி. மாபெரும் சமூக நீதியாளர். அசைக்க முடியாத தமிழ் பேராண்மைவாதி. எளிய மக்களின் பார்த்தசாரதி. அவர் புகழ் நீடு வாழ்க!!’ என பதிவிட்டுள்ளார்.
கலைஞர் தமிழக அரசியலில் ஒரு விடிவெள்ளி.
மாபெரும் சமூக நீதியாளர்.
அசைக்க முடியாத தமிழ் பேராண்மைவாதி.
எளிய மக்களின் பார்த்தசாரதி.
அவர் புகழ் நீடு வாழ்க!! #HBDKalaignar99 @INCTamilNadu @arivalayam— K.S.ALAGIRI (@KS_Alagiri) June 3, 2022