செயற்கை அருவி சட்டவிரோதம்.! மீறினால் தனியார் ரெசார்ட்டிற்கு சீல்.! உயர்நீதிமன்றம் அதிரடி.!
இயற்கைக்கு மாறாக செயற்கை நீர்வீழ்ச்சி உருவாக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட தனியார் ரெசார்ட்டிற்கு சீல் வைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் செயற்கை நீர்வீழ்ச்சி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளது என்கிற புகாரின் அடிப்படையில் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை புதிய உத்தரவை மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவித்துள்ளது .
அதில், இயற்கையான அருவி நீரோட்டத்தை மாற்றி செயற்கையாக நீர்வீழ்ச்சியை உருவாக்குவது சட்டவிரோதமானது. வணிக நோக்கத்துடன் இவ்வாறு செயற்கை நீர்வீழ்ச்சி உருவாக்குவது தவறானது என குற்றம் சாட்டினர்.
மேலும், இவ்வாறு இருக்கும் செயற்கை நீர்வீழ்ச்சிகளை கண்டறிய தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, கோவை ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்.
அந்த குழுவானது, குறிப்பிட்ட மாவட்டங்களில் செயல்படும் தனியார் ரெசார்ட்களில் ஆய்வு செய்து அவ்வாறு செயற்கை நீர்வீழ்ச்சி போன்ற சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் அந்த ரெசார்ட்டிற்கு சீல் வைக்க வேண்டும் எனவும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.