Art Exhibition [File image]
சென்னை : சென்னையில் அரசு கலைத்துறை சார்பில் ஓவிய கண்காட்சி மற்றும் விற்பனை நாளை முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த ஓவியம் மற்றும் கலை வல்லுனர்களின் படைப்புகள் ஆகியவை விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பில், கலை பண்பாட்டுத் துறை மற்றும் சென்னை அரசு கவின்கலைக் கல்லூரி சார்பில் தமிழக ஓவியச் சிற்பக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதரம் மேம்படும் வகையில் “சென்னையில் ஓவியச் சந்தை” நடைபெற உள்ளது.
சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் நாளை (ஆகஸ்ட் 3) முதல் ஆகஸ்ட் 5 வரையில் 3 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த ஓவியச் சந்தையில் தமிழகத்தைச் சார்ந்த கலை வல்லுநர்களின் ஓவியம் மற்றும் சிற்பக் கலைப் படைப்புகள் விற்பனைக்காக 100 அரங்குகளில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
இந்த “ஓவியச் சந்தையை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் நாளை (ஆகஸ்ட் 3) காலை 11 மணியளவில் துவங்கி வைக்க உள்ளார். சென்னையில் முதன்முறையாக மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த ஓவியச் சந்தையை பொதுமக்கள் பார்வையிட்டு தங்களுக்கு விருப்பமான கலைப் படைப்புகளை வாங்கிச் செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…