பாஜக ஆட்சியில்தான் தமிழ்நாடு மீனவர்கள் கைது நடவடிக்கை குறைந்துள்ளது – அண்ணாமலை
இந்தியா கூட்டணி மணிப்பூர் செல்வது மீண்டும் கலவரத்தை தூண்டுவதற்காகவே செல்கின்றனர் என அண்ணாமலை பேட்டி.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பாஜக ஆட்சியில்தான் தமிழ்நாடு மீனவர்கள் கைது நடவடிக்கை குறைந்துள்ளது. கச்சத்தீவு, நெடுந்தீவு பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது.
நெய்வேலி பிரச்சனையில், பயிர்கள் விளைவதற்கு முன்னதாகவே என்.எல்.சி பணியை தொடங்கியிருக்க வேண்டும். பயிர் விளைந்த பின் அவற்றை அழிப்பது எந்த விதத்தில் நியாயம், அதை தான் நேற்று உயர்நீதிமன்றமும் தெரிவித்திருந்தது.
நெய்வேலியில் 16,000 தமிழர்கள் வேலை பார்க்கிறார்கள். என்.எல்.சியை பொறுத்தவரையில் அதிகமாக பவர் சப்ளை வரக்கூடிய ப்ராஜெக்ட்டாக உள்ளது. அந்த காலத்திலேயே இது மிகவும் முக்கியமான ப்ராஜெக்ட்டாக கருதப்பட்டது. எனவே இதை ஒட்டுமொத்தமாக நிறுத்துவது சரியாக இருக்காது. நிலம் கொடுத்தவர்களின் பிள்ளைகளுக்கு வேலை வழங்க வேண்டும். நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகத்தின் 3வது சுரங்க விரிவாக்கத்திற்கு நாங்கள் தடை இல்லை.
மணிப்பூரில் நடப்பது இந்து மற்றும் கிறிஸ்தவ இனத்திற்கு இடையே நடக்கும் மோதல் அல்ல. இரண்டு இன மக்களுக்கு இடையே நடக்கும் மோதல். இந்தியா கூட்டணி மணிப்பூர் செல்வது மீண்டும் கலவரத்தை தூண்டுவதற்காகவே செல்கின்றனர். தற்போது மணிப்பூர் நிலைக்கு திரும்பி வருகிறது.
பாதையாத்திரையை பொறுத்தவரையில், இதன்மூலம் பாஜக கூட்டணிக்கு பெரும் பலம் கிடைக்கும். இந்த யாத்திரை மூலம் பிரதமர் மோடி மீது எதிர்கட்சிகள் வைக்கும் குற்றசாட்டுகளை உடைக்க ஏதுவாயிருக்கும் என தெரிவித்துள்ளார்.