“என்னை கைது செய்வது கனவில் தான் நடக்கும்;காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா..? – மீரா மிதுன்..!

Default Image

நடிகை மீரா மிதுன்,தன்னை கைது செய்வது கனவில் தான் நடக்கும்;காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா? என்று  பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமூக வலைத்தளத்தில் தன்னைப் பற்றி அனைவரும் அதிகமாக பேச வேண்டும் என்பதற்காகவே சர்ச்சை கருத்துக்களை அவ்வப்போது பேசி வரும் நடிகை மீரா மிதுன்,கடந்த சில தினங்களுக்கு முன்பு பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு அளித்த புகாரை அடுத்து நடிகை மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதனையடுத்து,நடிகை மீரா மிதுன் நேரில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் நேற்று சம்மன் அனுப்பினர்.

இந்த நிலையில்,தன்னை கைது செய்வது கனவில் தான் நடக்கும்;காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா? என்று நடிகை மீரா மிதுன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும்,இது தொடர்பாக வெளியான வீடியோவில் அவர் கூறியதாவது:

“பட்டியலின மக்களை ஒட்டுமொத்தமாக தவறானவர்கள் என்று நான் சொல்லவில்லை. அந்த மக்களில் எனக்கு தொந்தரவு கொடுத்தவர்களையே தவறானவர்கள் என்று கூறினேன்.தமிழ் திரையுலகில் நடக்கின்ற தவறான நடவடிக்கைகளையே தான் நான் கூறிவருகிறேன்.இந்த தமிழ் திரையுலகை தூய்மை ஆக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் நான் பேசுகிறேன். ஆனால்,நான் ஒரு தமிழ் சாதி பெண், அதனால்,நான் இந்த தமிழ்நாட்டில் வளர்ச்சியடைவதை பலரால் சகித்து கொள்ள முடியவில்லை.

ஏனென்றால் நான் ஒரு வெற்றிகரமான தொழில் அதிபராகவும், சாதனையாளர் ஆகவும் இருந்து வருகின்றேன்.அதனாலேயே என்னை வீழ்த்த தொடர்ந்து சதி நடக்கிறது.நான் நாட்டின் பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு நான் வைக்கின்ற ஒரே கோரிக்கை, முதலில் பெண்களுக்கு எதிராக பேசுகிற ஒவ்வொரு ஆண்கள் மீதும் நடவடிக்கை எடுங்கள்”,என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,தாராளமாக என்னை கைது செய்யுங்கள் ஏன் காந்தி, நேரு அவர்கள் எல்லாம் சிறைக்கு போகவில்லையா..?. ஆனால், என்னை கைது செய்வது என்பது நடக்காது. மேலும் அப்படி நடந்தால் அது உங்கள் கனவில் தான் நடக்கும்”,என்றும் போலீசாருக்கு சவால் விடும் விதமாக தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்