சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டது நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, சில வாரங்களுக்கு முன்னதாக 55 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து, சமீபத்தில் தான் விடுதலை செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், மேலும் 21 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
இதற்கு பலரும் கண்டம் தெரிவித்து வரும் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் 21 பேரை சிங்களை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்களின் இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட 55 மீனவர்கள் அண்மையில் தான் விடுவிக்கப்பட்டனர். ஆனால், அவர்களில் 43 பேரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டதால் அவர்கள் இன்னும் நாடு திரும்பமுடியவில்லை. அதற்குள் மேலும் 21 மீனவர்களை கைது செய்வது அத்துமீறலின் உச்சமாகும்.
இப்போது கைது செய்யப்பட்ட மீனவர்களையும் கொரோனா தாக்கும் ஆபத்து உள்ளது. அதனால், அவர்களை சிறையில் அடைக்காமல் விடுதலை செய்யவும், இலங்கையிடம் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில்…
சென்னை : தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் இன்று, அதாவது (ஏப்ரல் 1) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. …
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 அன்று, தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும்…
சென்னை : கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின்…
ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், ஒரு வார கால ஆராய்ச்சிப் பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS)…
மும்பை : ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையே மார்ச்…