கைது செய்யப்பட்ட தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், தொண்டர்கள் விடுதலை.!

சென்னை தி. நகரில் கைது செய்யப்பட்ட தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விடுதலை செய்யப்பட்டார்.

Bussyanand -Arrest

சென்னை: அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவாக தன் கைப்பட கடிதம் ஒன்றை விஜய் எழுதியிருக்கிறார். அதில், “யாரிடம் நாம் பாதுகாப்பு கேட்பது? ஆட்சியாளர்களை கேட்டு பயனில்லை. எல்லா சூழலிலும் நான் உங்களுடன் நிற்பேன். பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம். இதை நாம் இணைந்தே சாத்தியப்படுத்துவோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அந்த கடிதத்தை துண்டு பிரசுராமாக அக்கட்சியினர் வழங்கி வந்ததை பார்வையிட புஸ்ஸி ஆனந்த் வந்ததார். அப்போது, முன் அனுமதி பெறாமல் கூட்டம் கூடியதற்காக புஸ்ஸி ஆனந்த் மற்றும் அவருடன் இருந்தவர்களை போலீசார் கைது செய்து அருகே உள்ள தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

சென்னை, தி.நகரில் அனுமதியின்றி பிரசுரம் வழங்கியதாக கைது செய்யப்பட்ட தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விடுவிக்கப்பட்டார். மேலும், வருடன் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகளையும் போலீசார் விடுவித்தனர்.

தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் கைது செய்யப்பட்டதை கண்டித்து, திருமண மண்டபம் முன்பு த.வெ.கவினர் “விடுதலை செய்.. விடுதலை செய்”.. முழக்கமிட்டனர். மேலும், அந்தந்த மாவட்ட மகளிர் அணியினர் மற்றும் கழக தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 02012025
Arjuna Award 2024
KhelRatna Award
Tamilisai Soundararajan mk stalin
fog and a chance of light rain
power cut Description