தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் – திருமாவளவன்
திருவள்ளுவர் சிலையில் சாணியை பூசிய நபர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை ஒன்று உள்ளது. இந்த சிலை மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சாணியை பூசினர்.இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை கண்டறியும் வகையில், போலீசார் விசாரணையில் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில், இந்த செயலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் தமிழக அரசு உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்