தூத்துக்குடி அருகே போலி மதுபான பாட்டில்கள் பதுக்கியவர் கைது…!
தூத்துக்குடி அருகே போலி மதுபானம் பாட்டில்கள் பதுக்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேஉள்ள வீரபாண்டிய பட்டினம் சுனாமி நகரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட போலி மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது . மேலும் போலி மதுபானம் தயாரிக்க இருந்த கலர் ஸ்பிரிட் மற்றும் ஸ்டிக்கர் பாட்டில் மூடிகள் பறிமுதல் செய்யப்பட்டது .போலி மதுபானம் பாட்டில்கள் பதுக்கிய செல்லதுரை என்பவர் கைது செய்யப்பட்டார் .அதேபோல் மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.