மதுபோதையில் கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றவர் கைது..!

சென்னை பாரிமுனை அருகே உள்ள ஸ்ரீ வீரபத்திர சாமி கோவிலில் மதுபோதையில் வந்த நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த முந்திரி வியாபாரி முரளி கிருஷ்ணன். இவரது முந்திரி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த அவர், சாமி தனக்கு ஒன்றும் செய்யவில்லை என்று போதையில் கோவில் மீது பேற்றில் குண்டு வீசியுள்ளார்.
CBI, ED, IT ஆகிய அமைப்புகள் பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள்.! கார்கே கடும் குற்றசாட்டு.!
இதனையடுத்து, முந்திரி வியாபாரி முரளி கிருஷ்ணனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தொழிலில் இழப்பு ஏற்பட்டதால் மது அருந்துவிட்டு இந்த செயலில் ஈடுபட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பான குற்றவாளி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அரசியல் தலைவர்கள், தமிழகத்தில் இந்த குண்டு வீசும் கலாச்சாரம் தடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தி வந்த நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்ததக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025