புழல் சிறையில் தண்டனை கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவரும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் சில” கைதிகள் சொகுசு மெத்தையுடன் கூடிய அறை, ஆடம்பர உடை, விதவிதமான உணவுகள், செல்போன்களுடன் உல்லாச வாழ்க்கை “வாழ்ந்தது தெரியவந்தது.இந்த சிறைகளில் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர்.
இந்நிலையில் சிறைத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் இருந்த “டி.வி.க்கள், எப்.எம். ரேடியோக்கள், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்ததுள்ளனர்”. சிறை அறைக்குள் இவை எப்படி வந்தன? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
மேலும் “சிறையில் இருந்தவாறே வங்காளதேசம், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்போன்களில் சிலர் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது”. இதற்கு உடந்தையாக இருந்த சிறைக் காவலர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கிறது காவல்துறை.
இதனிடையே இன்று சேலம், கடலூர், கோவை மத்திய சிறையில் 180க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.சேலத்தில் துணை ஆணையர் சுந்தரமூர்த்தி தலைமையில் 40 போலீசாரும், கடலூரில் டிஎஸ்பி லாமேக் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசாரும் காலை 6 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அதே போல் கோவையில் எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தி வருவதாகவும் தெரிவித்த காவல்துறைக்கு தெரியாத சிறைச்சாலையில் கைதிகளின் சொகுசு வாழ்க்கை..!!சிறைக்குள் சொகுசு அனுபவித்த கைதிகளை பற்றி மக்களுக்கு தெரிந்தவுடன் சோதனை என்று 3 மத்திய சிறைக்கு கிளம்பிய காவல்துறை சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு பொருட்களை எப்படி அனுமதித்தது.சிறைச்சாலை என்பது செய்த குற்றத்திற்க்கான தண்டனையை அனுபவித்து அக்குற்றத் தவறிலிருந்து மனம் திருந்தி வாழவைப்பதாகும்.
ஆனால் தமிழக சிறைச்சாலையில் குற்றத்தை திருத்தி கொள்ள வாய்ப்பே இல்லாத சூழ்நிலையை கைதிகளுக்கு உருவாக்கியுள்ளது.
சிறை என்றால் ஒருவிதமான பயம் தோன்றும் எல்லோருக்கும் ஆனால் இன்று சிறைச்சாலை தானோ அங்கே மெத்தையுடன் கூடிய அறை, ஆடம்பர உடை, விதவிதமான உணவுகள், செல்போன்களுடன் உல்லாச வாழ்க்கையை நிம்மதியாக அனுபவிக்கிலாம் என்று குற்றாவளிகள் கூறும் அளவிற்கு தமிழக சிறைகளின் அவலநிலைக்கு இதற்கு யார் காரணம் அலட்சிய அதிகாரிகளா..??அல்லது கைதிகளின் இந்த சொகுசு வாழ்க்கை அதிகாரிகளின் அனுமதியோடு அரங்கேறியுள்ளதா..??என்று மக்கள் காவல்துறையை கேள்வி என்னும்” சாட்டையால்” அடிக்கின்றனர். சாட்டையடிக்கு பதில் அளிக்குமா காவல்..??
DINASUVADU
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…