தேனி குரங்கணி மலையேற்றத்திற்கு அழைத்துச்சென்ற சுற்றுலா வழிகாட்டி ராஜேஷ் கைது!
21 பேர் தேனி குரங்கணி தீ விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட விவரங்கள் வெளியாகின.தற்போது மலையேற்றத்திற்கு அழைத்துச்சென்ற சுற்றுலா வழிகாட்டி ராஜேஷ் கைது செய்யபட்டுள்ளார்.
இந்நிலையில் அங்கு சென்ற சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த பூஜா குப்தா, சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சகானா, சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த மோனிஷா,சென்னை முடிச்சூரைச் சேர்ந்த விஜயலட்சுமி மற்றும் வட பழனியைச் சேர்ந்த நிவேதா ஆகியோர் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சென்னையைச் சேர்ந்த அனுநித்யா 30 சதவிகித தீ காயங்களுடனும், போரூரைச் சேர்ந்த இலக்கியா 40 சதவிகித தீ காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருப்பூரைச் சேர்ந்த, சாஜனா, நேகா, பாவனா, ராஜசேகர் ஆகியோரும் சிறிய காயங்களுடம் மீட்கப்பட்டுள்ளனர். அத்துடன், ஈரோட்டைச் சேர்ந்த பிரபு, கவிதா சுப்ரமணியன் ஆகியோரும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பத்திரமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டைச் சேர்ந்த கவிதா,கண்ணன், சென்னையைச் சேர்ந்த நிஷா, சேலத்தைச் சேர்ந்த தேவி உள்ளிட்டோரும் மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எனவே காட்டுத்தீயில் 9 பேர் உயிரிழப்பு காரணமாக மலையேற்றத்திற்கு அழைத்துச்சென்ற சுற்றுலா வழிகாட்டி ராஜேஷ் கைது செய்யபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.