மீனவர்கள் கைது; கண்டித்து மீனவர் சங்க மாநாடு… முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு.!
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைக்கண்டித்து நடைபெறும் மீனவர் சங்க மாநாட்டில் முதல்வர் கலந்து கொள்வதாக தகவல்.
தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லும்போதெல்லாம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் அவ்வப்போது கைது செய்யப்படுகிறார்கள், மீனவர்களின் படகுகளும் பிடித்து வைக்கப்படுகின்றன. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுகிறது.
இதனைக்கண்டித்து மீனவர் நலச்சங்கங்கள் சார்பில் ராமநாதபுரத்தில் வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி மாபெரும் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதையும்,தாக்கப்படுவதையும் கண்டித்து மீனவர் சங்க மாநாடு நடைபெறுகிறது. முதல்வர் ஸ்டாலின், இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், வெளியிட்டுள்ள அறிக்கையில், மீனவர் நலச்சங்க பிரதிநிதிகள் அழைப்பை ஏற்று முதல்வர் ஸ்டாலின் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.