கிறிஸ்துமஸ் அன்று இதனை செய்தால் கைது – காவல்துறை எச்சரிக்கை!
கிறிஸ்துமஸ் (Christmas) என்பது ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கக் கொண்டாடப்படும் விழாவாகும். இந்த விழா வருகின்ற 25-ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டப்படுகிறது. இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சுமார் 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவித்துள்ளார். அதன்படி, கிறிஸ்துவ தேவாலயங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார்.
அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குற்ற நடவடிக்கைகளை தடுக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
குறிப்பாக, குடித்துவிட்டு வாகனம் ஓட்டினாலோ அல்லது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன சாகசத்தில் (Racing)-ஈடுபட்டாலோ அவர்கள் மீது வழக்கு பதிந்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் அவர்களின் ஓட்டுனர் உரிமமும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்
கண்காணிப்பாள சுந்தரவதனம் எச்சரித்துள்ளார்.
கேரளாவில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது – சுகாதாரத்துறை அமைச்சர்.!
பொதுமக்களின் உயிருக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டு அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு நபர்கள் சென்ற மாதம் மாவட்ட காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனால், வரக்கூடிய பண்டிகை நாட்களை பாதுகாப்பான முறையில் கொண்டாடி மகிழ்ந்திட பெதுமக்கள் அனைவரையும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.