மத்திய அமைச்சரவை கூட்டம் முடிந்த நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் செய்தியாளர்களை மத்திய அமைச்சர்கள் சந்திக்கவுள்ளனர்.
கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்டன் சென்ற போது எம்.ஐ ரக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் பயணம் செய்துள்ளனர். பனி மூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது என கூறப்படுகிறது.
குன்னூரில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர், ஒன்றரை மணி நேரமாக தீப்பிடித்து எரிகிறது. விமான பெட்ரோல் என்பதால் ஹெலிகாப்டரில் தீ அணையாமல் தொடர்ந்து எரிகிறது. விபத்து நடந்த இடத்தில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து காயங்களுடன் மீட்கப்பட்ட 3 பேர் சிசிக்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதனால், இதுவரை 7 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். விபத்து நடத்த இடத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில் தான் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம் உள்ளது. தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், மத்திய அமைச்சர்கள் கூட்டம் முடிந்த நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் செய்தியாளர்களை மத்திய அமைச்சர்கள் சந்திக்கவுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரம் தொடர்பாக தெரிவிக்க உள்ளனர். மேலும், ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் சிக்கிய நிலையில் அவரது நிலையைப் பற்றி அமைச்சர்கள் தெரிவிக்கவாய்ப்புள்ளது. முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உடல் நிலை குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலும் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில்,…
மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…
மலேசியா : தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் (Putra Heights), செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ்…
சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…
பர்ஹைட் : ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தின் பர்ஹைட் என்கிற பகுதியில் 2 சரக்கு ரயில்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 2…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் கடந்த மார்ச் 28ம் தேதி சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா…