நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!
தமிழ்நாட்டுக்கென நெய்தல் படை அமைப்பேன் எனக் கூறினால் சிரிக்கிறார்கள். நான் கூறியதை போல கேரளாவில் பினராயி விஜயன் நெய்தல் படை அமைத்துள்ளார் என சீமான் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “நான் நெய்தல் படை அமைப்பேன் என நான் கூறினால் சிரிக்கிறார்கள். நான் கூறியதை போல தானே கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கேரளாவில் நெய்தல் படை ஆரம்பித்துள்ளார்.
அப்போ, பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியது தானே. கடலில் என் மக்களை என் நாட்டு ராணுவம் காப்பாற்றவில்லை. அப்படி என்றால் எனக்கு எதற்கு ராணுவம்.? நான் தனியாக எனது மாநிலத்திற்கு என நெய்தல் படை வைத்துக்கொள்கிறோம் என்கிறோம். அதுதான் நாட்டை காப்பாற்ற ராணுவம் இருக்கிறது. ஊரை காப்பாற்ற போலீஸ் இருக்கு. பிறகு ஏன் வீட்டுக்கு வாட்ச்மேன் நியமிக்கிறீர்கள். ? அதுபோல தான் இதுவும்.
வாக்களிக்கும் போது துணை ராணுவம் பாதுகாப்புக்கு வந்து நிற்கிறது. அதுவே, காவிரி பிரச்சனை போது கர்நாடகாவில் தமிழக மக்கள் தாக்கப்பட்ட போது எந்த துணை ராணுவமும் வரவில்லை. தவிச்ச வாய்க்கு தண்ணீர் தராதவங்க கூட எப்படி பற்று வரும்.? ” என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆவேசமாக பேசியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025