Pa Ranjith [File Image]
சென்னை: பகுஜன் சமாஜ்வாடி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் நேற்று சென்னை, பெரம்பூர் பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய உடல் சென்னை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து இறுதி அஞ்சலிக்காக கட்சி அலுவலகம் அல்லது வேறு பொது இடத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து, அவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வேதனையுடன் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், சென்னை அரசு மருத்துவமனைக்கு சென்ற இயக்குனர் பா.ரஞ்சித் கண்கலங்கி கதறி அழுதார். ஆம்ஸ்ட்ராங் பா.ரஞ்சித், பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடன் நெருங்கிய நட்பும் அன்பும் கொண்டவர். எனவே அவருடைய இறப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் கதறி அழுதுள்ளார்.
மேலும், சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டடு வருகிறார்கள். இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…
சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…