சென்னை: ஆம்ஸ்ட்ராங் உடலானது சென்னை செம்பியத்தில் உள்ள தனியார் பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
தேசியவாத கட்சிகளின் பிரதான ஒன்றான பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று சென்னை, பெரம்பூரில் அவரது வீட்டருகே மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சம்பவம் தொடர்பான உண்மை நிலவரங்கள் கண்டறியப்பட்டு வருகிறது.
நேற்று படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலானது, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்து ஆம்ஸ்ட்ராங் உடல் சென்னை அயனாவரத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. முன்னதாக திருமாவளவன், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர், பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்திற்கு ஆம்ஸ்ட்ராங் உடல் கொண்டு செல்லப்பட உள்ளது. அங்கு அரசியல் கட்சியினர் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளனர். இதனை அடுத்து பொதுமக்கள் பார்வைக்காக ஆம்ஸ்ட்ராங் உடல் பொது இடத்தில் வைக்க அனுமதி கேட்கப்பட்டு இருந்தது.
அதன்படி, செம்பியம் பகுதியில் உள்ள பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் ஆம்ஸ்ட்ராங் உடலை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்க ஏற்பாடுகள் அரசு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கட்சி அலுவலகத்தில் இருந்து ஆம்ஸ்ட்ராங் உடலானது பொதுமக்கள் அஞ்சலிக்காக மேற்கண்ட மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட உள்ளது.
இதனை அடுத்து நாளை பிற்பகல் ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கப்பட்டு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. பகுஜன் சமாஜ்வாடி கட்சியினர், ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்ய அரசு அனுமதி கேட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…