மு.க.ஸ்டாலின் : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு வருத்தம் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு 7 மணி அளவில் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மேலும், தடுக்க முயன்ற அருகில் இருந்த 2 பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் பெரம்பூர் உட்பட ஒட்டுமொத்த தமிழகத்தையுமே உலுக்கி உள்ளது. சம்பவ இடத்தில் இரத்த வெள்ளத்தில் கிடந்த ஆம்ஸ்ட்ராங்கை உடனடியாக அருகில் இருந்தவர்கள் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர், அங்கு ஆம்ஸ்ட்ராங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், அவரது உடலை உடல்கூறு ஆய்வுக்காக ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக அடுத்த 4 மணி நேரத்தில் 8 பேர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அதை தொடர்ந்து மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த படுகொலை சம்பவம் குறித்து தற்போது முதல்வர் ஸ்டாலின் அவரது க்ஸ் தளத்தில் வருத்தங்கள் தெரிவித்து பதிவிட்டிருந்த்தார்.
அவர் அந்த பதிவில், “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது. திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன், ” என்று பதிவிட்டிருந்தார்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியான சம்பவம்…
மதுரை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில், மதுரையில் பேரணி நடத்தப்பட்டது. இதில்…
சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் கடந்த 40 மாதங்களில் 1666 புதிய நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. 2,778 நியாய…
அமெரிக்கா: ஹே சிரி... இதை செய், ஹே சிரி... அதை செய்... என சொல்லலும் ஆப்பிள் சொந்தகாரர்கள் அந்த சாதனத்தில்…
கோவை: கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த 18 டன் எடை கொண்ட எல்பிஜி டேங்கர் லாரி…
சென்னை :ஜவ்வரிசி வைத்து பஞ்சு போல ரசகுல்லா செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்:…