காவிாி மேலாண்மை வாாிய பணிகள் தொடங்கி விட்டன??
கடந்த சில தினங்களுக்கு முன்பு காவிாி நதிநீா் பங்கீடு தொடா்பாக உச்ச நீதிமன்றம் இறுதி தீா்ப்பு வழங்கியது. அந்த தீா்ப்பின் போது 6 வார காலத்தில் காவிாி மேலாண்மை வாாியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் இது தொடா்பாக மத்திய அரசு எந்தவித கருத்தையும் வெளிப்படையாக தொிவிக்காமல் இருந்தது. தற்போது இது குறித்து மத்திய நீா்வலத்துறை இணை அமைச்சா் அர்ஜூன்ராம் மெஹ்வால் பேசியுள்ளார்.
தமிழக அரசு , மத்திய அரசு காவிாி மேலாண்மை வாாியம் அமைப்பதை தாமதம் செய்வதாக குற்றம் சாட்டியது. மேலும் இது தொடா்பாக அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட்டு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் மத்திய நீா்வலத்துறை இணை அமைச்சா் அர்ஜூன்ராம் மெஹ்வால் இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தாா். அப்போது செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறுகையில், காவிாி மேலாண்மை வாாியம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி விட்டன. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபடி 6 வார காலத்திற்குள் மேலாண்மை வாாியம் அமைக்கப்படும் என்றும் தீர்வு காணப்படும் என்றும் கூறினார்.
மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு