பட்டாசு வெடித்த அர்ஜூன் சம்பத்…!அர்ஜூன் சம்பத் உள்பட 5 பேருக்கும் தலா ரூ. 1000 அபராதம்…!
பட்டாசு வெடித்தது தொடர்பாக இந்து மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட 5 பேருக்கு தலா ரூ. 1000 அபராதம் விதித்துள்ளது நீதிமன்றம்.
கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதானது.
இந்நிலையில் இந்து மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட 5 பேர் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டாடும் விதமாக கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
இந்நிலையில் இது அவர்கள் மீது பட்டாசு வெடித்தது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது.அதில் அர்ஜூன் சம்பத் உள்பட 5 பேருக்கும் தலா ரூ. 1000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.