BREAKING :வள்ளுவர் சிலைக்கு காவித்துண்டு -அர்ஜூன் சம்பத் கைது..!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டியில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் திருவள்ளுவர் சிலைக்கு திருநீறு பூசி, ருத்ராட்சம் மாலை, காவித் துண்டு அணிவித்து பூஜை செய்தார்.
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தால் சர்ச்சை ஏற்பட்டது.இந்நிலையில் அனுமதியின்றி திருவள்ளுவர் சிலைக்கு திருநீருடன் ருத்ராட்ச மாலையை அணிவித்ததால் வல்லம் போலீசார் கும்பகோணம் அருகே இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை கைது செய்து தஞ்சை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.