ரஜினி கட்சிக்கு சென்ற அர்ஜூன் மூர்த்தி.. ஜோதிடர் ஷெல்வி நியமனம்..!
நேற்று ரஜினிகாந்த் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும், இதுகுறித்து டிசம்பர் 31-ம் தேதி அறிவிக்கப்படும் என அறிவித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தான் தொடங்கப்போகும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தி என்று ரஜினி அறிவித்தார்.
பின்னர், பாஜகவில் நிர்வாகியாகவும், ரஜினிதொடங்கப்போகும் கட்சிக்கு நிர்வாகியாகவும் அர்ஜூன மூர்த்தி எப்படி இருக்க முடியும் என பேசப்பட்டு வந்த நிலையில், அர்ஜூன மூர்த்தி பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து, அடிப்படை உறுப்பினர் என அனைத்து பதவியில் இருந்த அர்ஜூன மூர்த்தி நீக்கம் செய்யப்பட்டார் என பாஜக அறிவித்தது.
இந்நிலையில், பாஜக அறிவுசார் பிரிவு தலைவர் பதவி காலியாக இருந்த நிலையில், அர்ஜூன் மூர்த்தி வகித்த பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவர் பதவிக்கு ஜோதிடர் ஷெல்வி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என பாஜக அறிவித்துள்ளது.