அரியர் தேர்வு: நீதிமன்ற உத்தரவின்படி முடிவு – அமைச்சர் அன்பழகன்.!

Default Image

நீதிமன்றம் உத்தரவின்படி அரியர் தேர்வு விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இறுதி நாளான இன்று தமிழக சட்டபேரவையில், அரியர் தேர்வுக்கு பணம் செலுத்திய மாணவர்கள் இல்லையா என்று அரசு விளமளிக்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ பொன்முடி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்,  நீதிமன்றம் உத்தரவின்படி அரியர் தேர்வு விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் அரியர் தேர்வு கட்டணம் செலுத்தாதவர்கள் தேர்வு எழுதவே தயாராக இல்லை என அர்த்தம் எனவும்  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தர் தன்னுடைய சொந்த மின்னஞ்சல் மூலம் ஏஐசிடிசிக்கு கடிதம் எழுதியுள்ளார். இவர் எழுதியுள்ள கடிதம் குறித்து மாணவ்வ்ர்கள் கவலை அடைய வேண்டாம் என்றும் கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கும் சட்ட மசோதாவும் சட்டப்பேரவையில் நிறைவேறியது. இதனிடையே, அரியர்ஸ் தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்