#BREAKING: அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது – யூஜிசி திட்டவட்டம்..!
அரியர் தேர்வு ரத்தை எதிர்த்து முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி மற்றும் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள போது பல கல்லூரிகள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. இந்நிலையில், ராம்குமார் ஆதித்தன் மேலும் ஒரு புதிய வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதை செல்லாது என்று அறிவிக்கவேண்டும், தேர்ச்சி முடிவுகளை மாணவர்களுக்கு வழங்கக்கூடாது என்றும் தெரிவித்து இருந்தார். இந்த வழக்கு இன்று சத்தியநாதன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்ததது.
அப்போது, யூஜிசி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது கூறியுள்ளோம். அதே நிலைப்பாடுதான் இந்த வழக்கிலும் உள்ளது என திட்டவட்டமாக தெரிவித்தது. இதனை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை நவம்பர் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
நவம்பர் 20-ம் தேதி முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி மற்றும் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் தொடர்ந்த வழக்கும் விசாரணைக்கு வரவுள்ளது.