அரியர் தேர்வுகள் ரத்து – தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் பாதிப்பு காரணமாக கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருந்தார் தமிழக முதல்வர் பழனிசாமி. மேலும் அரியர்ஸ் எழுதுவதற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே அரியர் தேர்வை ரத்து செய்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைகழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.அந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.அப்பொழுது செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசு, யூ.ஜி.சி. மற்றும் ஏ.ஐ.சி.டி.இ.-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!
March 16, 2025
சுனிதா – வில்மோரை மீட்கும் பணி வெற்றி.! பூமிக்கு திரும்பும்போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்?
March 16, 2025