அரியலூர் மாவட்டத்தில் புதியதாக அமையவுள்ள மருத்துவக்கல்லுரிக்கு இன்று அடிக்கல்.!

திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதற்காக 3,575 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.
அதில் மத்திய அரசின் பங்களிப்பாக 60 சதவீத நிதியும், மாநில அரசின் பங்களிப்பாக 40 சதவீத நிதியும் வழங்குகிறது. இதுவரை 9 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டியுள்ளார்.
இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் புதியதாக கட்ட உள்ள மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது. அரியலூர் தெற்கு கிராம பகுதியில் 10.83 ஹெக்டர் நிலப்பரப்பில் 347 கோடி ரூபாய் புதியதாக கட்டயுள்ள மருத்துவக் கல்லூரிக்கு இன்று முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்.