அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே வெற்றியூர் கிராமத்தில் தனியார் நாட்டுப்பாட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. ராஜேந்திரன் என்பவர் அதனை நிர்வகித்து வருகிறார். தீபாவளி நெருங்கும் சமயம் என்பதால் பட்டாசு தயாரிக்கும் வேலைகள் வெகு தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம் போல வேலை செய்து கொண்டு இருக்கும் போது காலை 9.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பாட்டாசு ஆலை முழுவதும் எரிந்து சேதமானது. உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயசித்தனர்.
இந்த தீ விபத்தில் முதலில் ஒருவர் பலியாகி இருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளளது. ஏற்கனவே, இதில் படுகாயமடைந்த 5 பேர் அங்கிருந்து மீட்கப்பட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பட்டாசு தொழிற்சாலை அருகே குடோன் இருப்பதால் தீ மளமளவென பரவி வருகிறது. இதனை அணைக்க தீயணைப்பு துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஏற்கனவே முன்னதாக ஓசூரில் பட்டாசு கடையில் தீ விபத்து விபத்து 14 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிட தக்கது. தீபாவளி நெருங்கும் சமயத்தில் இம்மாதிரியான தீ விபத்துகளை தடுக்க அரசும், பட்டாசு தொழிற்சாலை நிர்வாகமும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…