8 மாதங்காளாக கூண்டிலிருந்த அரிசிராஜா யானை விடுவிப்பு!

Default Image

அடிக்கடி பலரை கொலை செய்து வந்த அரிசி ராஜா என்ற முரட்டு யானை எட்டு மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டு தற்பொழுது விடுவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வெள்ளலூர் அருகே 2017 ஆம் ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி அரிசி ராஜா எனும் காட்டு யானை 4 பேரை மிதித்து கொன்றது. இந்த சம்பவம் செய்தி ஊடகங்களிலும் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் அங்கு விரைந்த வனத்துறையினர் அந்த யானைக்கு மயக்க ஊசி போட்டு அதனை பிடித்தனர். அதன்பின் அது வேறொரு வனப்பகுதியில் விடப்பட்டது, அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் மே மாதம் அந்த யானை விளைநிலங்களை நாசப்படுத்தி அங்கிருந்த ஏழு வயது சிறுமியையும் கொன்றது. இந்நிலையில் இந்த யானையின் செயல் மிகவும் கொடூரமாக இருப்பதை அறிந்து பலரும் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் சிறுமி இறந்த அடுத்த நாளே முதியவர் ஒருவரும் அந்த யானையால் கொல்லப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து வனத்துறையினர் இரு கும்கி யானைகள் உதவியுடன் இந்த காட்டு யானை பிடிக்கும் முயற்சியில் மே மாதம் ஈடுபட்ட நவம்பர் மாதம் அர்த்தநாரி பாளையத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் விவசாயிகள் கொல்லப்பட்ட பின்னரே நவம்பர் மாதத்தில் பிடித்துள்ளனர். இந்நிலையில் இந்த யானை அதிக அளவு அரிசியை உண்ணும் என்பதால் அரிசி ராஜா என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது.

யானை மிகவும் கொடூரமான செயல்களை செய்து வருவதால் அதனை பிடித்து புலிகள் காப்பக துணை இயக்குனர் மாரிமுத்து தலைமையில் இந்த யானையை பிடித்து பொள்ளாச்சி டாப்சிலிப் உள்ள வரகளியாறு பகுதியில் உள்ள மர கூண்டில் அடைத்து கடந்த 8 மாதங்களாக யானை கவனிக்கப்பட்டு வந்துள்ளது. யானைக்கு உட்காருதல், உணவு உட்கொள்ளுதல் கட்டளைகளுக்கு கீழ்ப்படிதல் போன்ற பல பயிற்சிகள் அளிக்கப்பட்டு தற்போது ஜூலை 21-ஆம் தேதி பூஜைகள் செய்யப்பட்டு வரவேற்கப்பட்டு உள்ளது.

அந்த யானைக்கு தற்பொழுது வனத்துறை சார்பில் முத்து என பெயர் சூட்டப்பட்டுள்ளது. நல்ல ஆரோக்கியமான நிலையில் யானை உள்ளது, மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் வருகின்ற ஆகஸ்ட் 12ம் தேதி யானைகள் தின விழாவில் சின்னதம்பி யானையுடன் அரிசி ராஜா என்றழைக்கப்படும் முத்துவும் பங்கேற்பார் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்