முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் விடப்பட்டது அரிக்கொம்பன்.
கடந்த மாதம் கேரள மாநிலம் இடுக்கி பகுதியில் சுற்றி திரிந்த அரிக்கொம்பன் யானையை கேரள வனத்துறையினர் தமிழக எல்லையில் விட்ட நிலையில், இந்த யானை தேனி, கம்பம் பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்தது. இந்த யானை தாக்கியதில் பால்ராஜ் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக உயிரிழந்தார்.
இதனை அடுத்து, யானையை பிடிக்க வனத்துறையினர் கடந்த சில வாரங்களாக முயன்று வந்தனர். கோடை மழை பெய்து வந்ததால் யானையை பிடிக்கும் முயற்சியில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது அரிசி கொம்பன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி நேற்று பிடித்தனர். தற்போது அரிக்கொம்பன் யானை பிடிப்பட்டதையடுத்து, ஏற்கனவே உத்தரவிட்டிருந்த 144 தடை நீக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிடிப்பட்ட அரிக்கொம்பன் யானை நெல்லை மாவட்டம் முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள, மேல கோதையாறு பகுதியில் வனத்துறையினால் விடப்பட்டது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…