அரிக்கொம்பன் யானை கோதையாறு வனப்பகுதியில் உள்ள நிலையில், யானைக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் கேரள மாநிலம் இடுக்கி பகுதியில் சுற்றி திரிந்த அரிக்கொம்பன் யானையை கேரள வனத்துறையினர் தமிழக எல்லையில் விட்ட நிலையில், இந்த யானை தேனி, கம்பம் பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்தது. இந்த யானை தாக்கியதில் பால்ராஜ் என்பவர் உயிரிழந்தார்.
இதனை அடுத்து, யானையை பிடிக்க வனத்துறையினர் கடுமையாக போராடி, இறுதியாக மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இந்நிலையில், பிடிப்பட்ட அரிக்கொம்பன் யானை நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் வனத்துறையினால் விடப்பட்டது.
தற்போது இந்த அரிக்கொம்பன் யானை கோதையாறு வனப்பகுதியில் உள்ள நிலையில், யானைக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சரியான உணவு உட்கொள்ளாததால் அரிக்கொம்பனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யானை விடப்பட்ட இடத்தைவிட்டு வேறு எங்கும் செல்லாமல் அங்கேயே சுற்றி வரும் நிலையில், ஏற்கனவே அங்குள்ள யானைக்கூட்டத்துடன் சேராமல் தனியாக வலம் வருகிறது. அரிக்கொம்பன் யானை ஊருக்குள் வராத வகையில் தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் வனத்துறை ஈடுபட்டுள்ளது.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…