பிடிபட்ட அரிக்கொம்பன்…! 144 தடை நீக்கம்..!
அரிக்கொம்பன் யானை பிடிப்பட்டதையடுத்து, 144 தடை நீக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
கடந்த மாதம் கேரள மாநிலம் இடுக்கி பகுதியில் சுற்றி திரிந்த அரிக்கொம்பன் யானையை கேரள வனத்துறையினர் தமிழக எல்லையில் விட்ட நிலையில், இந்த யானை தேனி , கம்பம் பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்தது. இந்த யானை தாக்கியதில் பால்ராஜ் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, மக்களின் பாதுகாப்பு கருதி யானை சுற்றி திரிந்த கம்பம் , ராயப்பன்பட்டி, கே.கே.பட்டி, கூடலூர் மற்றும் சுருளிப்பட்டி உள்ளிட்ட பகுதியில் 144 தடை விதிக்கப்பட்டிருந்த அனைஅலையில், தற்போது அரிக்கொம்பன் யானை பிடிப்பட்டதையடுத்து, இந்த 144 தடை நீக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.