வேட்புமனு தாக்கலில் வெடித்த சர்ச்சை.! திமுக – அதிமுக இடையே கடும் வாக்குவாதம்.!
![DMK vs ADMK](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/03/DMK-vs-ADMK.webp)
DMK-ADMK : வடசென்னை மக்களவை தொகுதியில் யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது என்பது தொடர்பாக திமுக அதிமுகவினர் இடையே வாக்குவாதம்.
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 2 நாட்களே (மார்ச் 28 கடைசி நாள்) உள்ள நிலையில், இன்று பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை அந்தந்தந்த தொகுதி தேர்தல் அலுவலர்களிடம் சமர்ப்பித்து வருகின்றனர்.
வடசென்னை மக்களவை தொகுதிக்கான திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ ஆகியோரும் தங்கள் வேட்புமனுக்களை தான் முதலில் வாங்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் சலசலப்பு ஏற்ப்பட்டது.
அதாவது , திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி வருவதற்கு முன்னரே அவரது ஆதரவாளர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான டோக்கனை அதிகாரிகளிடம் வாங்கிவிட்டார். அதன்படி டோக்கன் எண் 2ஆக இருந்துள்ளது. அதன் பிறகு 11.45 மணி அளவில் வந்த அதிமுக வேட்பாளர் ராயபுரம் மணிக்கு டோக்கன் எண் 7 கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக வேட்பளாருடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வந்துள்ளார்.
அதிமுக வேட்பாளருக்கு பின்னர் தான் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அமைச்சர் சேகர்பாபு உடன் வந்துள்ளார் என தெரிகிறது. அப்போது டோக்கன் படி நாங்கள் தான் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வோம் என திமுகவும், முதலில் வேட்பாளருடன் வந்த நாங்கள் தான் வேட்புமனு தாக்கல் செய்வோம் என திமுக , அதிமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால், யாரிடம் வேட்புமனு வாங்குவது என குழம்பிய தேர்தல் அலுவலர், பின்னர் மூத்த அதிகாரிகளிடம் விவரத்தை கூறிவிட்டு, முதலில் சுயேட்சை வேட்புமனுவை பெறுவதாகவும், அதன் பின்னர் டோக்கன் வரிசைப்படி வேட்புமனுக்களை பெறுவதாகவும் கூறியுள்ள்ளனர்.
இதனை அதிமுக தரப்பு ஏற்றுக்கொண்டாலும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் இதுகுறித்து தங்கள் தரப்பு புகாரை அளித்துள்ளனர். இந்த வாங்குவதற்கு இடையில் பாஜக வடசென்னை வேட்பாளர் பால் கனகராஜ், தாங்கள் வேட்புமனு செய்ய காலதாமதாகிறது என பாஜகவினரும் தேர்தல் அலுவலரிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024![Lokesh Kanagaraj Production Mr Bhaarath Movie promo](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Lokesh-Kanagaraj-Production-Mr-Bhaarath-Movie-promo.webp)
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024![Union Minister Amit shah](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Union-Minister-Amit-shah-5.webp)