தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஏரியா சபை,வார்டு கமிட்டி ஆகியவை அமைப்பதற்கான விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி,நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் வார்டு கமிட்டிகள் அமைக்கப்படும்.இதற்கு தலைவராக அப்பகுதி வார்டு கவுன்சிலர் இருப்பார் எனவும்,3 மாதத்திற்கு ஒரு முறை வார்டு கமிட்டி கூட்டம் நடைபெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைப்போல,மாநகராட்சிகளில் உள்ள வார்டுகளுக்கு ஏரியா சபைகள் அமைக்கப்பட்டு,3 மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும் ஏரியா சபை கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது வார்டு குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில்,ஏரியா சபை,வார்டு கமிட்டி அமைப்பதற்கான விதிமுறைகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு மநீம தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது:”கிராம சபைகளைப் போலவே,நகர்ப்புற மக்கள் பங்கேற்பு ஜனநாயகத்திற்கு வழிகோலும் ஏரியா சபை, வார்டு கமிட்டிகளை அமைப்பதற்கான சட்டம் 2010-இல் கொண்டுவரப்பட்டது.இவற்றை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளைத் தமிழக அரசு வகுக்காததால் இந்தச் சட்டம் 12 ஆண்டுகளாகச் செயல்பாட்டுக்கு வராமல் இருந்தது.
அதன்பின்னர்,இதற்கான விதிகளை வகுக்கக் கோரி மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து குரலெழுப்பிவந்தது.நான் கடந்த பிப்ரவரியில் தமிழக அரசின் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து இது குறித்து வலியுறுத்தினேன். ஏரியா சபைகள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என மார்ச் மாதம் தமிழக முதல்வர் அறிவித்தார்.
தற்போது ஏரியா சபை,வார்டு கமிட்டி அமைப்பதற்கான விதிமுறைகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளதை மநீம வரவேற்கிறது.இவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதைத் தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். மக்கள் பங்கேற்பை உறுதி செய்யும் உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தும் மநீமவின் பணிகள் தொடரும்”,என்று தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…