நான் வேறு கட்சிக்கு மாறவிருப்பதாக பரவும் செய்தி வதந்தி என விஜயதாரணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து, அனைத்து கட்சியினர் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். ஆனால் திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் மட்டும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்காமல் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மட்டுமே அறிவித்துள்ளது. காங்கிரஸ் சார்பில் விளவங்கோடு, குளச்சல், மயிலாடுதுறை, வேளச்சேரி ஆகிய தொகுதிளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கவில்லை.
அதேபோல பாஜகவும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் 17 பேரை மட்டுமே அறிவித்துவிட்டு விளவங்கோடு, தளி, உதகமண்டலம் ஆகிய தொகுதிளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கவில்லை. இதற்கிடையில், விளவங்கோடு தொகுதியில் மீண்டும் விஜயதாரணி களமிறக்கப்பட்டால் கடுமையான சவால் அளிக்கும் வேட்பாளரை பாஜக களமிறக்க முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணிக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்காதபட்சத்தில் அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து, காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி விளக்கம் அளித்துள்ளார். அதில், விளவங்கோடு தொகுதி மக்களுக்காக சட்டசபையில் குரல் கொடுத்துள்ளேன். விளவங்கோடு தொகுதியில் போட்டியிட எனக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என நம்புகிறேன். நான் வேறு கட்சிக்கு மாறவிருப்பதாக பரவும் செய்தி வதந்தி என தெரிவித்துள்ளார்.
விளவங்கோடு தொகுதியில் யாரை காங்கிரஸ் களமிறக்கவுள்ளது என தெரிந்த பின்னர் தான் நாங்கள் எங்கள் வேட்பாளர் பட்டியலை அறிவிப்போம் என பாஜக தரப்பில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திமுக சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியானது. அந்த வேட்பாளர் பட்டியலில் திமுக எம்எல்ஏ சரவணனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்காததால் நேற்று காலை பாஜகவில் இணைந்த திமுக எம்எல்ஏ சரவணனுக்கு உடனடியாக சீட் வழங்கப்பட்டது.
இதனால், காங்கிரசில் இருந்து விஜயதாரணி பாஜகவில் இணையும் பட்சத்தில் பாஜக விஜயதாரணிக்கு விளவங்கோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் இன்று மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…