வேறு கட்சிக்கு செல்கிறாரா..? விஜயதாரணி விளக்கம்..!

Default Image

நான் வேறு கட்சிக்கு மாறவிருப்பதாக பரவும் செய்தி வதந்தி என விஜயதாரணி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து, அனைத்து கட்சியினர் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். ஆனால் திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் மட்டும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்காமல் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மட்டுமே அறிவித்துள்ளது. காங்கிரஸ் சார்பில் விளவங்கோடு, குளச்சல், மயிலாடுதுறை, வேளச்சேரி ஆகிய தொகுதிளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கவில்லை.

அதேபோல பாஜகவும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் 17 பேரை மட்டுமே அறிவித்துவிட்டு விளவங்கோடு, தளி, உதகமண்டலம் ஆகிய தொகுதிளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கவில்லை. இதற்கிடையில், விளவங்கோடு தொகுதியில் மீண்டும் விஜயதாரணி களமிறக்கப்பட்டால் கடுமையான சவால் அளிக்கும் வேட்பாளரை பாஜக களமிறக்க முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணிக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்காதபட்சத்தில் அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து, காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி விளக்கம் அளித்துள்ளார். அதில்,  விளவங்கோடு தொகுதி மக்களுக்காக சட்டசபையில் குரல் கொடுத்துள்ளேன். விளவங்கோடு தொகுதியில் போட்டியிட எனக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என நம்புகிறேன். நான் வேறு கட்சிக்கு மாறவிருப்பதாக பரவும் செய்தி வதந்தி என தெரிவித்துள்ளார்.

விளவங்கோடு தொகுதியில் யாரை காங்கிரஸ் களமிறக்கவுள்ளது என தெரிந்த  பின்னர் தான் நாங்கள் எங்கள் வேட்பாளர் பட்டியலை அறிவிப்போம் என பாஜக தரப்பில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திமுக சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியானது. அந்த வேட்பாளர் பட்டியலில் திமுக எம்எல்ஏ சரவணனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்காததால் நேற்று காலை பாஜகவில் இணைந்த திமுக எம்எல்ஏ சரவணனுக்கு உடனடியாக சீட் வழங்கப்பட்டது.

இதனால், காங்கிரசில் இருந்து விஜயதாரணி பாஜகவில் இணையும் பட்சத்தில் பாஜக விஜயதாரணிக்கு விளவங்கோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் இன்று மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை  வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்