ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காதவரா நீங்கள்…? கூட்டுறவுத்துறை செயலாளரின் முக்கிய அறிவிப்பு..!
குடும்ப அட்டை வைத்திருந்து டேஷன் பொருட்கள் வாங்காத நபர்கள் கௌரவ அட்டை பெற்றுக் கொள்ளலாம் என ராதா கிருஷ்ணன் அறிவிப்பு.
கூட்டுறவுத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்காதவர்களின் விவரம் குறித்து நடைபெறுகிறது.
குடும்ப அட்டை வைத்திருப்பவர்களில் பொருட்கள் வாங்காதவர்களை ஒழுங்கு படுத்துவதற்காக இந்த கணக்கெடுப்பு நடைபெறுகிறது. குடும்ப அட்டை வைத்திருந்து டேஷன் பொருட்கள் வாங்காத நபர்கள் கௌரவ அட்டை பெற்றுக் கொள்ளலாம்.
பொதுமக்களை ரேஷன் கடைக்கு வரும் போது, சோப்பு போன்ற இதர பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது. அவ்வாறு கட்டாயபடுத்தினால், ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.