என்னப்பா ‘ஜப்பானிய மொழி’ கத்துக்கலாமா? அரசு நடத்தும் இலவச பாடம் இதோ ..!
தமிழக அரசு நடத்தும், ஜப்பானிய மொழி கற்கும் பாடத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க அக்-15 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழக அரசின், நான் முதல்வர் எனும் திட்டத்தின் கீழ் தமிழ் வழியில் ஜப்பானிய மொழி கற்கும் புதிய பாடத்திட்டத்தை இலவசமாக கற்கலாம் என தமிழக அரசு தற்போது தெரிவித்துள்ளது. அதன்படி, ஜப்பானிய மொழியை கற்க விரும்புவோர் இதில் பதிவு செய்து பலனடையலாம்.
மேலும், ஜப்பானில் 18 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு இருப்பதால் அங்கு சென்று வேலையை எளிதில் கற்றுக் கொள்ள ஜப்பானிய மொழி எளிதாக இருக்கும் என்பதால் தமிழக அரசு இந்தப் புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது.
ஜப்பான் அரசு, பொறியியல், மெக்கானிக், செமி கண்டெக்டர், AI, ML, ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் நர்சிங் போன்ற துறைகளில் சுமார் 18 லட்சம் தகுதி உள்ள பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறது. அதுவும் தேர்வாகும் பட்டதாரிகளுக்கு இந்தியவில் கிடைக்க கூடிய சம்பளத்தை விட 3 முதல் 6 மடங்கு அதிகாமாக கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், பொறியியலில் N2 லெவல் முடித்தவர்களுக்கு 1 வருடத்திற்கு ரூ.21 லட்சம் சம்பளமாக அளிப்பதாக கூறியுள்ளனர். அதே போல பொறியியல் அல்லாது N4 லெவல் முடித்தவர்களுக்கு வருடம் 12 முதல் 15 லட்சம் வரை ஊதியமாக அறிவித்துள்ளனர். இதனால், ஜப்பான் மொழி கற்று கொண்டு பயனடைய ஒரு அறிய வாய்ப்பை தமிழக அரசு தற்போது ஏற்படுத்தி இருக்கிறது.
3 மாதங்கள் இந்த பாடத்திட்டம் நடைபெறும் எனவும் அதுவும் இலவசமாகவே கற்றுக்கொள்ளலாம் எனவும் கூறியிருக்கின்றனர். இதற்கு விருப்பம் கொண்ட விண்ணப்பதாரர்கள் இந்த லிங்கை Registration Form க்ளிக் செய்து தங்களின் பெயர் மற்றும் இதர விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம் எனவும் இதற்கு விண்ணப்பிக்க அக்-15 தான் கடைசி தேதி எனவும் தெரிவித்துள்ளனர்.