ரெடியா மாடுபிடி வீரர்களே? ஜல்லிக்கட்டு முன்பதிவு நாளை தொடக்கம்!

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள் நாளை முதல் விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

jallikattu 2025

சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வரும் 14-ந்தேதி , 15-ந்தேதி பாலமேடு, 16-ந்தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவிருக்கிறது.

ஏற்கனவே, போட்டிகளில் பங்கேற்கும் விலங்குகளுக்கு தேவையற்ற துன்பம் தரக் கூடாது, காளைகளுக்குத் தேவையற்ற வலி மற்றும் கொடுமைகள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ள குழு நிகழ்ச்சியின் போது உடனிருந்து அறிக்கை அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நெறிமுறைகளை அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியீட்டு இருந்தது.

இதனையடுத்து, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ள நாட்கள் நெருங்கியுள்ள நிலையில், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள் நாளை முதல் ஆன்லைனில் தங்களுடைய பெயர்களை பதிவு செய்துகொள்ளலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.

விண்ணப்பம் செய்வது எப்படி? 

  • மதுரை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://madurai.nic.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவேண்டும்.
  • அதன்பிறகு அதில் கொடுக்கப்பட்டிருக்கும் Jallikattu – Bull / Tamer Registration – ஜல்லிக்கட்டு காளை / காளையை அடக்குபவர் பதிவு என்ற பிரிவை க்ளிக் செய்யவேண்டும்.
  • பின், Jallikattu – Tamer Registration – ஜல்லிக்கட்டு காளையை அடக்குபவர் பதிவு க்ளிக் செய்யவேண்டும்.
  • அதனை க்ளிக் செய்த உடன் விண்ணப்பம் வரும் அதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்கள் அனைத்தையும் உங்களிடம் இருக்கும் தேவையான ஆவணங்களை வைத்து விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.

குறிப்பு : ஜல்லிக்கட்டிடு போட்டியில் கலந்து கொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் நாளை மாலை 5 மணிமுதல் நாளை மறுநாள் 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்