60 வயது நிரம்பியவரா நீங்கள்.? இலவச ஆன்மீக சுற்றுலாவுக்கு தயாரகுங்கள்…!

Spiritual Tour

ஆன்மீக சுற்றுலா : சென்னை,  தஞ்சாவூர். கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களை தலைமையிடமாக கொண்டு நடைபெறும் ஆடி மாத அம்மன் திருக்கோயில் ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்த குடிமக்கள், அதாவது 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கையின் விவாதத்தில் 2024-2025-ம் நிதி ஆண்டில் ஆடி மாதத்தில் 60 முதல் 70 வயதுடைய மூத்த குடிமக்களை தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன் கோவில்களைத் தரிசிக்க ஆன்மீகச் சுற்றுலா திட்டம் தொடங்கப்படும்.

சுமார் 1000 பக்தர்கள் இந்த ஆன்மீகச் சுற்றுலாவில் பங்கு பெறலாம் எனவும் இதற்காக தமிழக அரசு ரூ.50 லட்சம் நிதியாக வழங்கும்” எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஆன்மீகச் சுற்றுலாவிற்கான முன்பதிவு மற்றும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, தஞ்சை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய மண்டலங்கள் பிரிக்கப்பட்டு புகழ்பெற்ற அம்மன் கோவில்களுக்கு சுமார் 1000 பக்தர்கள் இலவசமாக அழைத்துச் செல்ல உள்ளனர்.

சென்னை மண்டலம் :

மயிலை கற்பககாம்பாள் ஆலயம், பாரிமுனை அன்னை காளிகாம்பாள் கோவில், திருவொற்றியூர் வடிவுடை அம்மன், மாங்காடு காமாட்சி அம்மன், திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில் ஆகிய இடங்கள்.

தஞ்சை மண்டலம் :

தஞ்சை பெரிய கோவில், வராகி அம்மன், பங்காரு காமாட்சி அம்மன், புன்னை நல்லூர் மகாமாரியம்மன், திருக்கருகாவூர் கற்பகரட்சாம்பிகை, பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவில் ஆகிய இடங்கள்.

கோவை மண்டலம் :

கோனியம்மன் கோவில், பொள்ளாச்சி மாரியம்மன், ஆனைமலை மாசானி அம்மன், அங்காளம்மன், சூலக்கல் மாரியம்மன், தண்டு மாரியம்மன் ஆகிய இடங்கள். அதேபோல் திருச்சியில் உறையூர் வெக்காளி அம்மன், திருவாணைக்காவல் அகிலாண்டேஸ்வரி, சமயபுரம், உஜ்ஜையினி கோவில் ஆகிய இடங்கள்.

மதுரை மண்டலம் :

மதுரை மீனாட்சி, வண்டியூர் மாரியம்மன், மடப்புரம் காளியம்மன், அழகர்கோவில் ராக்காயி கோவில், சோழவந்தான் ஜனகை மாரியம்மன் கோவில்.

நெல்லை மண்டலம் :

குமரி பகவதிஅம்மன் கோவில், சுசீந்திரம் ஒன்னுவிட்ட நங்கையம்மன், மண்டைக்காடு பகவதி அம்மன், முப்பந்தல் இசக்கி அம்மன், குழித்துறை சாமுண்டி அம்மன்.

என இந்த பயணத்தில் இந்த மணடலத்தில் உள்ள கோவில்களும் அடங்கும்.  மேலும், வருகிற ஜுலை 19,26 மற்றும் ஆகஸ்ட் 2 , 9 ஆகிய நாட்களில் 4 கட்டங்களாக தொடங்கப்படும் இந்த பயணத்திற்கான விண்ணப்பத்தினை www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதன் பின்பு அந்தந்த பகுதிகளில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான கடைசி நாள் வருகிற ஜூலை 17 ம் தேதியுடன் முடிவடைகிறது. நீங்கள் 60-70 வயதுடைவார்களாக இருந்தால் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்