நீர் தர மறுக்கும் காங்கிரஸுக்கு வாக்கு கேட்பதா? ஜெயலலிதா இருந்தால்… சீமான் பேட்டி!
தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ் கட்சிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாக்கு கேட்கிறார் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். சென்னையில் சந்திப்பில் பேசிய சீமான், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தால், காவிரியில் தண்ணீர் தாராவிடில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று கூறியிருப்பார். ஆனால், தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ் கட்சிக்கு முதலமைச்சர் வாக்கு கேட்கிறார். எனவே, திமுக கூட்ணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றினால், திமுக கூட்டணியில் நாம் கட்சி சேர தயார் என சீமான் கூறியதாகவும், கூறப்படுகிறது.
இதையடுத்து பேசிய அவர், 18 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றசாட்டினார். மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவின் ஊழலை பற்றி பேசுகிறாரே, தவிர அதிமுகவின் ஊழலை பற்றி ஏன் பேசுவதில்லை. பாஜக, அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதால், அந்த கட்சி புனித கட்சி ஆகிவிட்டதா?, கோடநாடு கொலை வழக்கை பற்றி அண்ணாமலை ஏன் பேசுவதில்லை. நேர்மையானவர் என்றால் அனைத்து தவறுகள் பற்றியும் பேச வேண்டும் எனவும் கூறியுள்ளார்.