எத்தனை நாள் இந்தி தெரியாது என்றால் அவமதிக்கப்படுவதை, பொறுத்துக்கொள்ளப் போகிறோம் ? கனிமொழி
எத்தனை நாள் இந்தி தெரியாது என்றால் அவமதிக்கப்படுவதை, பொறுத்துக்கொள்ளப் போகிறோம் ? என்று கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
யோகா மருத்துவர்களுக்கான யோகா பயிற்சி கடந்த 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடைபெற்றது.இந்த பயிற்சியில் இந்தியா முழுவதும் 350-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.தமிழகத்தை சேர்ந்த 37 பேர் இதில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜா பங்கேற்றார் .அப்பொழுது ராஜேஷ் கொடேஜா இந்தியில் பேசினார்.இந்த சமயத்தில் தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் குறுக்கிட்டு ஆங்கிலத்தில் பேசும்படி தெரிவித்தனர்.ஆனால் ராஜேஷ் கொடேஜா,எனக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரியாது என்று கூறி ,இந்தி தெரியாதவர்கள் பயிற்சியில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்றும் கூறினார். இவர் இவ்வாறு கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இது குறித்து திமுக எம்பி கனிமொழி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், மத்திய ஆயுஷ் அமைச்சக செயலர் வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா, அமைச்சகத்தின் பயிற்சி வகுப்பில்,இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என்று சொல்லியிருப்பது மத்திய அரசின் இந்தி திணிப்பு கொள்கையை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கிறது.இது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு, உடனடியாகஅந்த செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் எத்தனை நாள் இந்தி தெரியாது என்றால் அவமதிக்க படுவதை, பொறுத்துக்கொள்ளப் போகிறோம் ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Govt should place the Secretary under suspension and initiate appropriate disciplinary proceedings. How long is this attitude of excluding non Hindi speakers to be tolerated ?
2/4
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 22, 2020