விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகள் இதுதானாமா..?
விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் விரும்பும் தொகுதிகள் குறித்த பட்டியலை திமுகவிடம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து திமுக தலைவர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தில் சட்டப்பேரவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தாங்கள் போட்டியிடும் விரும்பும் தொகுதிகள் குறித்த பட்டியலை திமுகவிடம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலில்
- வேளச்சேரி
- கள்ளக்குறிச்சி
- காட்டுமன்னார்கோவில்
- திட்டக்குடி
- புவனகிரி
- உளுந்தூர்பேட்டை
- சோழிங்கநல்லூர்
- குன்னம்
- மயிலம்
ஆகிய தொகுதிகள் உள்ளன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகள் கிடைக்குமா..? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.