திருக்கோயில் சிலைகள் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்ய 12 குழுக்கள் அமைப்பு…!
திருக்கோயில் சிலைகள் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்ய தமிழ்நாடு தொல்லியல் துறை 12 குழுக்களை அமைத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் சிலைகள் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்ய தொல்லியல் அலுவலர்கள் அடங்கிய 12 குழுக்களை தமிழ்நாடு தொல்லியல் துறை அமைத்துள்ளது.
அதன்படி,தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு உட்பட்ட சென்னை,வேலூர்,விழுப்புரம் திருச்சி ,தஞ்சாவூர்,காஞ்சிபுரம்,மயிலாடுதுறை,சேலம்,கோவை,மதுரை,சிவகங்கை,திருநெல்வேலி உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கான 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும்,ஒவ்வொரு குழுவுக்கும் இரண்டு அல்லது மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குழுக்கள் திருக்கோயில்களில் ஆய்வு மேற்கொண்டு கோயில்களுக்கு சொந்தமான சிலைகள் சரியாகவுள்ளனவா? என்ற பணிகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.