மாணவர்களே ரெடியா? மருத்துவ படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடக்கம்!
தமிழ்நாட்டில் MBBS மற்றும் BDS படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது.
2023-24ஆண்டிற்கான MBBS மற்றும் BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் ஜூலை 10ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகள், பல் மருத்துவ கல்லுரிகளில் சேர மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதன்படி, http://tnhealth.tn.gov.in என்ற முகவரியில் இன்று காலை 10 மணி முதல் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது.
மருத்துவ படிப்புக்கான விண்ணப்பதிவு முடிந்த பிறகு, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு ஜூலை இரண்டாவது வாரத்துக்கு பிறகு கலந்தாய்வு தொடங்க உள்ளது. மொத்தம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் கலந்தாய்வு நிரப்பப்பட உள்ளன. இந்த நிலையில், இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.