11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் 3ம் தேதி பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு.
11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்டை வரும் 3ம் தேதி முதல் www.dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் சென்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இத்தொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மார்ச்/ஏப்ரல் 2023 நடைபெறவுள்ள, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் தொடர்பாக, பள்ளி தலைமையாசிரியர்கள் வரும் 3ம் தேதி பிற்பகல் முதல் www.dge1.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று “online-portal” என்ற வாசகத்தினை “Click” செய்ய வேண்டும்.
பின்னர் “HIGHER SECONDARY FIRST YEAR / SECOND YEAR EXAM MARCH/APRIL 2023″ என தோன்றும் பக்கத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID, Password-ஐ கொண்டு தங்கள் பள்ளி மாணவர்களது தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுக்களை (Hall Tickets) பதிவிறக்கம் செய்தல் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளை மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் தவறாமல் பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும். இதற்கு அனைத்து தலைமையாசிரியர்கள் ஒத்துழைப்பு அளிக்க அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…