மாணவர்களே ரெடியா? வரும் 3ம் தேதி முதல் ஹால் டிக்கெட் – தேர்வுத்துறை அறிவிப்பு

Default Image

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் 3ம் தேதி பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு.

11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்டை வரும் 3ம் தேதி முதல் www.dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் சென்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இத்தொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மார்ச்/ஏப்ரல் 2023 நடைபெறவுள்ள, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் தொடர்பாக, பள்ளி தலைமையாசிரியர்கள் வரும் 3ம் தேதி பிற்பகல் முதல் www.dge1.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று “online-portal” என்ற வாசகத்தினை “Click” செய்ய வேண்டும்.

பின்னர் “HIGHER SECONDARY FIRST YEAR / SECOND YEAR EXAM MARCH/APRIL 2023″ என தோன்றும் பக்கத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID, Password-ஐ கொண்டு தங்கள் பள்ளி மாணவர்களது தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுக்களை (Hall Tickets) பதிவிறக்கம் செய்தல் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளை மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் தவறாமல் பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும். இதற்கு அனைத்து தலைமையாசிரியர்கள் ஒத்துழைப்பு அளிக்க அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்