தமிழகத்தை சேர்ந்த 50 லட்சம் ரேசன் பயனாளர்களின் ஆதார் விவரங்கள் ஆன்லைனில் லீக்கானதாக பெங்களூருவைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனமான டெக்னிசாங்க்ட் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் பொது விநியோக அமைப்பு (பி.டி.எஸ்) ஹேக் செய்யப்பட்டதாகவும்,அதன்மூலம் 50 லட்சம் ரேசன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய தரவு, ஹேக்கர்களுக்கான இணையதளத்தில் பதிவேற்றப்பட்டதாகவும் பெங்களூருவைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனமான டெக்னிசாங்க்ட் தெரிவித்துள்ளது.
அவ்வாறு,இணையத்தில் லீக் ஆன தரவுகளில் தமிழகத்தில் மொத்தம் 49,19,668 ரேசன் பயனாளர்களின் ஆதார் தகவல்கள் அடங்கியுள்ளதாக சைபர் பாதுகாப்பு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் குறிப்பாக 3,59,485 தொலைபேசி எண்களுடன் அஞ்சல் முகவரிகள் மற்றும் பயனர்களின் ஆதார் எண்கள் போன்றவை அடங்கும். மேலும்,புதிதாகப் பிறந்த குழந்தைகள் உட்பட அனைத்து குடிமக்களின் பதிவையும் வைத்திருக்க மாநில அரசு அறிமுகப்படுத்திய ‘மக்கள் எண்’ ஆகியவை அடங்கும்.
இந்த லீக் ஆன தரவு தமிழக அரசுடன் தொடர்புடைய வலைத்தளத்திலிருந்து அல்லது மூன்றாம் தரப்பு விற்பனையாளரிடமிருந்து நேரடியாக தரவு மீறப்பட்டதா என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை. எவ்வாறாயினும், தமிழக சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் திணைக்களம் அதன் தளத்தில் உள்ள டாஷ்போர்டு பி.டி.எஸ் அமைப்புக்கு 6.8 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட பயனாளிகள் இருப்பதைக் காட்டியிருப்பதால்,லீக் ஆனதாக கூறும் தகவல்கள் அதன் ஒரு பகுதியாகும்.
லீக் ஆன தரவு ஜூன் 28 ஆம் தேதியன்று ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.ஆனால் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ஹேக் செய்யப்பட்டு விட்டது என்று பெங்களூரைச் சேர்ந்த டெக்னிசாங்க்டின் தலைமை நிர்வாக அதிகாரி நந்தகிஷோர் ஹரிகுமார் தெரிவித்துள்ளார்.
எனினும்,இது தொடர்பாக மாநில அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அங்கு மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 15…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு…
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…
டெல்லி : ஜார்கண்டில் நேற்றுடன் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் நாளை முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதே போலக் கேரளாவில்…